குழந்தை உலகம்-58
*பாலினம்*
மனிதர்கள் அனைவரும் தனியாள் வேற்றுமை கொண்டவர்கள் தான்.
அந்த வகையில்,
ஆண், பெண் என இருபாலரும் வேறுபட்டவர்கள்தான்.
வேறுபட்டவர்கள் என்றால் ஏற்றத்தாழ்வு கொண்டவர்கள் என்ற பொருள் கொள்ளத் தேவையில்லை.
அறிவியலில் பல வேதிப்பொருள்களைப் பற்றிப் படிக்கும் போது , அவற்றின் பண்புகள், தன்மைகள், இயல்புகள்,பயன்பாடுகள் என்றுதான் படிக்கின்றோம்.
வேதிப்பொருள்களுக்குள் ஏற்றத்தாழ்வு பற்றி படிப்பதில்லை.
ஆனால்
மனிதர்கள் என்று வரும்போது, ஒவ்வொரு மனிதனின் பண்புகள், குணநலன்கள், பழக்க வழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் என்று ஒருவர் பேசினால் இன்னொருவர் அதை ஏற்றத்தாழ்வாக பார்க்கிறார்.
மனிதர்களுள் வேற்றுமைகள் உண்டு, ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்ற உண்மைகளை ஏற்றுக்கொண்டால் உலகில் அமைதி தவழும்.
அதே போல் பாலினத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.
ஆனால் பாலினத்தில் வேற்றுமைகள் உண்டு.
உடலமைப்பு, பழக்கவழக்கங்கள், எண்ணங்கள், போன்றவற்றில் வேற்றுமை
காணப்படுகிறது.
இதனால் தான் மனித நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து அவரவர்க்கு ஏற்றவாறு வேலைகளைப் பகிர்ந்து கொண்டு செய்து வருகின்றனர்.
குடும்பமாகச் செய்ய வேண்டிய தொழில் வேளாண்மை.
இந்தத் தொழிலில் ஆண், பெண் இருபாலரும் இணைந்து உழைத்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருக்கிறது. விதைப்பது,
நாற்று நடுவது, களை பறிப்பது , அறுவடை செய்வது போன்ற பணிகளைப் பெண்களும்,
ஏர் உழுவது, வரப்பை சீர்செய்வது, உரமிடுவது, நீர் பாய்ச்சுவது, கதிர் அடிப்பது, தாணியங்களை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பது போன்ற பணிகளை ஆண்களும் பாரம்பரியமாகச் செய்து வருகின்றனர்.
இவை, இருபாலருக்கிடையில் வேற்றுமை உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது.
இவற்றில் ஏற்றத்தாழ்வு கற்பித்தவர்கள் சமூக அமைதியைச் சீர்குலைக்கும் எண்ணம் கொண்ட எதிர்மறைச் சிந்தனை கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.
நமது உடலில் பல்வேறு ஹார்மோன்கள் எனப்படும் நிணநீர்ச் சுரப்பிகள் இருக்கின்றன.
இவை அனைத்தும் நமது எண்ணங்களுக்கு ஏற்ப சுரப்பு நீரை உற்பத்தி செய்து வருகின்றன.
நாம் விரும்பும் உணவைக் நினைத்து ஆசை கொண்டால் உமிழ்நீர் சுரக்கும், கோபம் கொண்டால் பிட்யூட்டரி நீர் சுரக்கும், கவலை கொண்டால் கண்ணீர் சுரக்கும். இதே போன்று ஒவ்வொரு சுரப்பிக்கும் திறவுகோலாக நமது எண்ணங்கள் இருக்கின்றன.
ஆணாகப் பிறந்தவர்கள், தாங்கள் 'ஆண்' என்ற எண்ணத்துடன் வாழ்வதால் 'ஆன்ட்ரோஜன்' என்ற ஹார்மோன் அவர்களது உடலில் சுரக்கிறது.
பெண்ணாகப் பிறந்தவர்கள் , தாங்கள் பெண் என்ற எண்ணத்துடன் வாழ்வதால் 'ஈஸ்ட்ரோஜன்' என்ற ஹார்மோன் அவர்களது உடலில் சுரக்கிறது.
இந்த எண்ணங்கள் இடம் மாறிவிட்டால் அவர்களது பாலினமே திரிந்து விட வாய்ப்புள்ளதாக நான் கருதுகிறேன்.
பாலினம் திரிந்தவர்களுக்கு சமூகத்தில் மற்றவர்களைப் போன்ற அந்தஸ்து கிடைப்பதில் சிக்கல் தொடரத்தான் செய்கிறது.
இது போன்றச் சிக்கலில் நமது பிள்ளைகள் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று நினைத்தால் ,
நம்முடைய ஆண் பிள்ளைகளை 'ஆண்' என்ற எண்ணத்துடனும், பெண் பிள்ளைகளைப் 'பெண்' என்ற எண்ணத்துடனும் வளரக்கூடியச் சூழலை நாம் ஏற்படுத்தித் தருவது நல்லது என்று நான் நம்புகிறேன்.
அதே சமயம் "இருபாலரிடமும் வேற்றுமை உண்டு, ஏற்றத்தாழ்வுக் கிடையாது" என்ற எண்ணத்தையும் சேர்த்தே ஊட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம்.
9943422906
arumariganeshu@gmail.com
Comments
Post a Comment